டிக்சிட்டின் நோக்கம் இங்கு தெளிவாகப் புலனாகிறது. விழுந்தவன் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற வாதமாக, தோல்வி கண்ட இந்திய ராஜதந்திர வரலாற்றுக்கு ‘வெற்றிமாலை’ அணிந்துவிட அவர் முயற்சிக்கிறார்.
Articles (Tamil)
மேல்நோக்கிய பயணி
பிரேமிளின் கவிதைகளில் வெளிப்பாடு காணும் சுய தரிசனத்தை நோக்கிய தேடல் ஆன்மீக ரீதியானது. இந்த ஆன்மீகம் மதம் சம்பந்தப்பட்டதல்ல. சத்தியத்தை நோக்கிய மனிதத் தேடலையே அது குறிக்கும்.
போரும் சமாதானமும்
இலங்கையில் பெருமளவு முதலீடு செய்வதற்கோ, அன்றி இத்தீவை உலக முதலாளியத்தின் ஒரு வர்த்தக வலயமாக மாற்றுவதற்கோ, முடிவில்லாமல் தொடரும் இப்போர் ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது. இதனால் சமாதான வழியில் பிரச்சினையைத் தீர்க்க முயலுமாறு மேற்குலகம் சிறீலங்காவுக்கு அழுத்தம் போடுகிறது.
பூநகரிப் பாதை விவகாரமும், ஐ.நா. தூதரகத்தின் ஒப்பந்தமும்
இந்த முக்கியமான விவகாரத்தில் எந்தவொரு பொறுப்பையும் தான் எடுப்பதற்குத் தயாராக இல்லையென ஐக்கிய நாடுகள் கைவிரித்து நின்றால் தமிழ் மக்கள் யாரிடம் சென்று முறையீடு செய்வது? அப்படியாயின் ஐ.நா.வின் கண்காணிப்பு எதற்கு?
சுவர்க்கம்போல அழகான தீவும், அங்கு வசிக்கும் அசிங்கமான மனிதர்களும்
பௌத்தத்தின் புராணக் கதைகளைப் புகுத்திக் கௌதமரின் மெய்யியல் தரிசனத்தை சிதைத்தது மட்டுமல்லாமல், சிங்களவர்களின் வரலாற்றையும் மகாவம்சம் தலைகீழாகத் திரித்துவிட்டு இருக்கிறது.
சீதன விவாதம்: ஏன் இந்த மௌனம்?
யாழ்ப்பாண இராச்சியம் இன்னும் புராண யுகத்தில் உறங்கிக் கிடக்கிறது; இருண்ட காலத்து இதிகாசங்களில், தாலாட்டுப் பாடல்களில் நிம்மதியாகத் தூங்குகிறது. யாழ்ப்பாணத்து மனிதனைத் தட்டியெழுப்புவது யார்? படித்தவர்களும், புத்திஜீவிகளும் கும்பகர்ணர்களாகத் தூங்கும் போது, யாழ்ப்பாண சமூகத்தின் விழிப்புணர்வை செயற்படுத்துவது எங்ஙனம்?
குடாநாட்டு முற்றுகையை முறியடித்த கடற்புலிகளின் கடல் ஆதிக்கம்
கடற்புலிகளின் பாதுகாப்புக் கவசம் இருப்பதால் கிளாலிப் பயணம் தொடர்கிறது. யாழ் குடா முற்றுகையின் முதுகெலும்பு கடற்புலிகளால் முறியடிக்கப்பட்டு விட்டது.
அன்றைய அரச பாரம்பரியமும் இன்றைய போராட்டமும்
திம்பு மகாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னராக ஈழத்தமிழினத்தின் ஏகோபித்த கோரிக்கையாகத் திம்புவில் முன்வைப்பதற்காகத் தமிழீழ சுதந்திர சாசனம் ஒன்றை விடுதலைப் புலிகள் இயக்கம் தயாரித்தது. இந்தச் சாசனத்தில் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய கோட்பாடுகளுக்குத் தெளிவான வரைவிலக்கணமும், தமிழர் தேசியப் பிரச்சினையில் அவை பெறும் முக்கியத்துவமும் விளக்கப்பட்டன.
புலிகளின் தலைவரும் பிரேமதாசாவும்
தலைவர் பிரபாகரனைப் பொறுத்தவரை தமிழர் தாயகம் அடிப்படையானது; அந்த அடிப்படையில்தான் தமிழர் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு.
தலைவர் பிரபாகரனும், அங்கிலிக்கன் ஆயரும்
மறுநாள் இரு சமாதானப் புறாக்கள் சிறைக்கூட்டிலிருந்து சுதந்திரமாக வெளியே பறந்தன. அதேநாள் இரு போர்க்கழுகுகள் மட்டுவில் கிராமம் மீது இராட்சதக் குண்டுகளை வீசிவிட்டுச் சென்றன.
புலிகளும், மத சுதந்திரமும்
தமிழ் இன ஒருமைப்பாட்டையும், தேசிய சுதந்திரத்தையும் இலட்சியமாக வரித்துக் கொண்ட ஒரு விடுதலை இயக்கம், மதசார்பான கொள்கைகளைக் கடைப்பிடிப்பது தவறானதாகும். இந்தக் குறுகிய மதவாதப் போக்கு தமிழ் இன ஒற்றுமைக்கும், தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் பெரும் முட்டுக்கட்டையாக அமையும்.
பெண் விடுதலையும், புலிகளும்
முதலாளிய உலகில் பெண்ணினம் ஈவிரக்கமற்ற முறையில் சுரண்டப்படுகிறது. தொழிலில் சமத்துவமின்மை நிலவுகிறது. ஆணாதிக்க வன்முறை தாண்டவமாடுகிறது. மிகவும் ஆபாசமான விளம்பரப் படிமங்களாகப் பெண்கள் சித்தரிக்கப்படுகிறார்கள்.
பிரேமதாசா எப்படிப்பட்ட மனிதர்?
பிரேமதாசாவின் அந்தரங்க மனோ உலகத்தை இனங்கண்டு விமர்சிப்பது கடினம். ஏனென்றால் அவர் ஒரு முகமூடி மனிதர். காலத்திற்குக் காலம், தேவைகளுக்கேற்ப முகமூடிகளை அணிந்து நடிப்பவர். மிகவும் திறமையாக நடிப்பவர்.
தொண்டமானின் சமரச முயற்சியும், சிங்களப் பேரினவாதமும்
தமிழீழ மக்களின் அரசியல் போராட்ட வரலாற்றில் காலத்திற்குக் காலம் சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, ஒப்பந்தங்கள், உடன்பாடுகள் காணப்பட்டபோது, சிங்கள-பௌத்த பேரினவாதம் தலைதூக்கி அதற்கெல்லாம் ஆப்புவைத்து விடுவது தொடர்ந்து நடைபெறும் சரித்திர நிகழ்வு.
போரும் சமாதானமும்
ஒரு யுத்தத்தின் போக்கை நிர்ணயிப்பது ஆட்பலமோ அல்லது ஆயுத பலமோ அல்ல. மிகவும் நுட்பமாகத் தயாரிக்கப்படும் போர்முறைத் திட்டங்களே ஒரு போரின் விளைவுகளைத் தீர்மானித்து விடுகிறது.
தமிழீழ தேசியக் கொடி
புலிச்சின்னம் தேசிய சின்னமாக மக்களின் உணர்வுகளில் ஆழமாகப் பதிந்தது. செத்துப் போய்க் கிடந்த தமிழ்த் தேசிய ஆன்மா புத்துயிர் பெற்றது. இன்று எமது தேசியக் கொடியாகிய புலிக்கொடியின் கீழ் தமிழீழ தேசிய இனம் ஒன்றுபட்டு நிற்கிறது. எழுச்சி கொண்டு நிற்கிறது.
சாதியமும் புலிகளும்
தேசிய சுதந்திரத்தை மட்டுமன்றி, சாதியம் ஒழிக்கப்பட்ட ஒரு சமதர்ம சமுதாயத்தைக் கட்டி எழுப்பும் உறுதியான கொள்கையில் எமது இயக்கம் செயற்பட்டு வருகின்றது.
மக்கள் யுத்தமும், புரட்சிகர சித்தாந்தமும்
புரட்சிகர சித்தாந்தமானது வாழ்வனுபவத்திலிருந்து பிறப்பெடுக்கிறது. வாழ்வோட்டத்தின் நிதர்சனத்திலிருந்து கருக்கொள்கிறது. நாளாந்த நடைமுறைப் பிரச்சினைகளிலிருந்து பிரசவம் கொள்கிறது.
புலிகளின் ஆயுதப் பாதை
உலகளாவிய ரீதியில் குமுறி வரும் விடுதலைப் போராட்டங்களையும், புரட்சிகளையும் நாம் உன்னிப்பாகக் கற்றறிந்து, இந்த உலகானுபவத்திலிருந்து எமது பார்வையைக் கூர்மைப்படுத்தி வருகிறோம்.
கெரில்லா யுத்தம் பற்றிய குறிப்புகள்
சட்ட ரீதியான, சனநாயகப் போராட்ட வடிவங்கள் படுதோல்வி கண்ட சூழ்நிலையில், இன அழிப்பு அட்டூழியங்களிலிருந்து எமது மக்களைப் பாதுகாக்க வேறெந்த வழியுமற்ற சூழ்நிலையில்தான் புரட்சிகர ஆயுத எதிர்ப்பு இயக்கம் தமிழீழத்தில் தலைதூக்கியது.
கடவுளும் மனிதனும்
அறியாமை என்ற தூக்கத்திலிருந்து நாம் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை. கனவுகளின் இனிய சொப்பனங்களில் மனித மனமானது நிறைவுகொள்ளப் பார்க்கிறது. வாழ்க்கையை கனவாக்கி அர்த்தமற்றதாக்கி விட்டுக் கனவை வாழ்க்கையாக்கி அர்த்தம் காண விழைகிறோம்.